2012

on Tuesday, December 9, 2008

உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று மாயன் நாகரிகம் (கட்டிட கலை, கணிதத்தில் வல்லுநர்களான இவர்கள் வாழ்ந்த காலம் 250 B.C TO 900 B.C) ஆகும்( அதுக்கு இன்னா இப்போ அப்படின்னு கேக்குறீங்களா?). இவங்க அந்த காலத்திலேயே ஒரு பெரிய்ய்ய்ய்ய காலண்டர் தயாரிச்சு வச்சிருந்தாங்க, இப்ப அந்த இனத்த சார்ந்தவாங்க யாரும் இல்ல. ஆனா அவங்க வழிபட்ட வழிபாடு தளங்கள், அவிஹ வாழ்ந்த இடம் எல்லாம் இன்னும் இருக்கு. இப்ப என்ன மேட்டர்நா! அவங்க அப்ப தயாரிச்சு வச்ச காலண்டர் வர்ற 2012 ஆம் வருசத்தோட முடியிது. ஒரு சிலர் இந்த காலண்டர்ர ஆதாரமா வச்சிக்கிட்டு 2012 தான் உலகத்தோட கடைசி நாள் அப்படிங்கறாங்க, ஒரு சிலர், அதுல்லாம் ஒண்ணும் கிடையாது நைனா 2012 ஒரு பெரிய மாற்றம் வரும் அப்படிங்கறாங்க, இன்னும் ஒரு சிலரோ ரெண்டுமே கிடையாது உலகம் வழக்கம் போல சுத்திக்கிட்டு தான் இருக்கும் பொம்பளைங்கோ மெகா சீரியல்லும், ஆம்பளைங்கோ டாஸ்மாக் லையும், குருவி படத்தோட 1200ஆவது நாள் விழாவுமா போய்கிட்டு இருக்கும் அப்படின்னு சொல்றாங்க. ஆனா நம்ம ROLLAND EMERICH (DIRECTOR OF INDEPENDENCE DAY, PATRIOT, GODZILLA, THE DAY AFTER TOMORROW, 10,000 B.C) என்ன சொல்றாருன டேய் எடுபட்ட பயலுவளா! போக்கத்த பேமானி பசங்களா மரத்த வெட்டுரத நிப்பாட்டுங்கடா, பெட்ரோல் வண்டி ஒட்டாதிங்கடா இல்லாட்டி 2012LA கடல் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளம் வந்து சாவிங்கடா அப்படின்னு அடுத்த வருஷம் (JULY 10 2009) ரிலீஸ் பண்றதுக்கு 2012 அப்படிங்கற பேர்ல ஒரு படம் எடுத்துக்கிட்டு இருக்காரு. ஆனக்க ( டிரைலேர் --> சொடிக்கி பாருங்க)இப்ப வந்துருக்கு. உலகத்திலேயே பெரிய மல இமய மல தான் இமய மலைய மறைச்சிகிட்டு ஒரு பெரிய வெளளம் வர மாதிரி ட்ரைலர்ல்ல காட்டிருக்கான் பாரு, தசாவதார சுனாமில்லாம் செத்துச்சு. 2012

3 comments:

பரிசல்காரன் said...

//குருவி படத்தோட 1200ஆவது நாள் விழாவுமா போய்கிட்டு இருக்கும் அப்படின்னு சொல்றாங்க.//

நல்லா சிரிச்சேன் நண்பரே!

நீங்க எழுதின விதம் சூப்பர்.

settings>comments> போய் word verificationஐ எடுத்துடுங்க.

SPIDEY said...

//settings>comments> போய் word verificationஐ எடுத்துடுங்க//---->DONE

Sir Thank you very much for your comments

குடுகுடுப்பை said...

வில்லு படமும் அப்ப ஓடுமா?