ஹைக்கூ

on Saturday, December 13, 2008

ப்ராய்லர் கடைக்கு சென்றதால் ஏற்பட்டப் பாதிப்பை ஹைக்கூவாக (அப்படிங்கற பேர்ல) உங்கள் பார்வைக்கு படையலிடுகிறேன்.




ஒரு உயிரின் விலை
60.ரூ
ப்ராய்லர் கடையில்!






கண்முன்னே
ஒரு
கருகலைப்பு
ஆம்லெட்!





பூலோக பிரளயம் ----> விமர்சனம்

on Wednesday, December 10, 2008


இந்த இடுகை இரண்டு வாரம் (14.12.2008)முன்பு இடப்படிருக்க வேண்டிய இடுகை ஆனால் பல அலுவல்கள் இல்லாத அலுவல் இருந்த காரணத்தினால் இன்று post செய்கிறேன். சென்ற வாரம் "மகேஷ் சரண்யா மற்றும் பலர் " (மகேஷ் சரண்யா மற்றும் தியேட்டரில் சிலர் என்று பெயரிட்டு இருக்கலாம் ) என்று ஒரு மொக்கை படத்திற்கு போய் கடி வாங்கி வந்திருந்ததற்கு பிராயச்சித்தமாக நண்பனுடன் இந்த படம் ( பூலோக பிரளயம்) சென்றேன் . படத்தின் சில ஆரம்ப காட்சிகள் ஓடிய பிறகு தான் entry கொடுக்க முடிந்தது.



படத்தில் பல இடங்களில் botany, zoology, social science, geography போன்ற வகுப்புகள் திடீர் என்று எடுக்க படுகிறது. கதாநாயகி (JENIFFER CONNELLY) ஒரு விஞ்ஞானி biology வகுப்பு எடுத்து அறிமுகமாகிறார்.அவர் பணி முடிந்து வீடு சென்று,அவர் மகனுக்கு உணவு தயாரிக்கும் போது,அவரை லோக்கல் போலீஸ் எந்த முன்னறிவுப்பும் இன்றி அவரை ஒரு helicaptor(இதற்கு தமிழில் என்ன பெயர்?) ஏற்றி "நாசா"வின் அலுவலகத்திற்கு அனுப்புகின்றனர் . அங்கு ஒரு தலைமை விஞ்ஞானி geography வகுப்பு எடுத்த பின்னர்,பூமியை நோக்கி விண்கல் போன்ற அளவில் பெரிய கோளம் விரைந்து வருவதாகவும் சிறிது நேரத்தில் அமெரிக்காவில் உள்ள New york,Central park எனும் இடத்தில் land ஆக போவதாகவும், அதை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாகவும் கூறுகிறார். மேலும் 30,000 k.m வேகத்தில் வருவதால் பூமியில் அது மோதும் போது மிக பெரிய அழிவு ஏற்படும் என்று கூறுகிறார். பின்னர் அனைத்து விஞ்ஞானிகளையும் (கதாநாயகி உட்பட) New york அனுப்புகிறார்கள்.

ஆனால் மோதி பேரழிவு ஏற்படுத்த போவதாக நினைத்த உருண்டை கோளம் பயங்கர வெளிச்சத்துடன், அமைதியாக ஒரு Benz S class கார் போன்று ஒரு பார்க்கில் land ஆகிறது. அந்த கோளத்தில் இருந்து ஒரு உருவம் வெளியே வர முயற்சிக்க, அமெரிக்க இராணுவம் வழக்கம் போல அசட்டு தனமாக அந்த உருவத்தை சுட்டு விடுகிறது. உருவம் சுட பட்ட வுடன் அந்த கோளத்தில் இருந்து ஒரு மிக பெரிய ரோபோ வெளியே வர, நியூ யோர்க்கில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மின்சார இணைப்பு தானாக ஒரு சில நிமிடங்கள் துண்டிக்க படுகிறது. இதனால் அந்த கோளத்தையும் ரோபோவையும் இயக்குவது ஒரு வேளை நம்ம ஆற்காடு வீராசாமியோ! என்று இயக்குனர் நம்மை எண்ணவைத்து திகில் உண்டாக்குகிறார். சுட பட்ட அந்த உருவத்தை இராணுவம் தங்களுடைய ஆராய்ச்சி சாலைக்கு எடுத்து செல்கின்றனர். ஆராய்ச்சி சாலையில் அந்த உருவம் பாம்பு சட்டையை உரிப்பது போல தன்னுடைய தோலை உதிர்த்து மனித உருவம்(KEANU REEVES) பெறுகின்றது.

பின்னர் விசாரணையில் அந்த alien தன் பெயர் Klaatu என்றும் மனிதர்களாகிய நாம் இந்த பூமியை சரியாக பராமரிக்கவில்லை என்றும் இயற்கையை சீரளிப்பதாலும் சிறிது வருடத்தில் இந்த பூமி காப்பாற்ற முடியாத நிலைக்கு சென்று விடும் எனக் கூறுகிறது. பின் வரும் காட்சிகளில் பூமியின் வளத்தை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளாகிய மனிதர்கள் அழிந்தால் பூமி தன்னை தானே உயிர்ப்பித்து கொள்ளும் என கூறுகிறான். மேலும் மனிதர்களை அளிக்கும் பணிக்காகவே தன் கிரகத்தின் தலைவர்கள் தன்னை அனுப்பியதாக klaatu கூறுகிறான். மனிதர்கள் அழிந்தார்களா? க்லாடு எண்ண ஆனான்? என்பதை (என்னால டைப் பண்ண முடியல அதனால) வெள்ளி திரையில் அல்லது திருட்டு டீவீடீயில் அல்லது அடுத்த வருடம் H.B.O , Star Movies திரையிடும் போது காண்க. படத்தின் இறுதியில் உலகம் முழுக்க மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டு மீண்டும் ஆற்காடு வீராசாமி வந்து விட்டாரோ என எண்ண வைத்து திகில் உண்டாக்குகிறார் இயக்குனர்.

Room போட்டு யோசிப்பார்களோ என எண்ண வைக்கிறார்கள்.வழக்கம் போலgraphicsஇல் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாப்பாத்திரம் உணர்ந்து மிகையில்லாமல் நடித்திருக்கிறார்கள். ஆனால்climax இல் சொதப்பி விட்டார் இயக்குனர்Scott Derrickson.

இந்த படத்தை பற்றி விக்கிப் பார்த்த போது ( ஹலோwikipediaங்க) 1951இல் வெளி வந்த படத்தின் ரீமேக் என்று தெரிய வந்தது

படத்தை பார்க்கும் போது நமக்கு தேவையில்லாமல் பல கேள்விகள் எழுகிறது
ஏன் பூலோக அழிவு சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் அமெரிக்காவில் ஆரம்பம் ஆகிறது?
பதில் தெரிஞ்சா யாரவது சொல்லுங்கப்பா

2012

on Tuesday, December 9, 2008

உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று மாயன் நாகரிகம் (கட்டிட கலை, கணிதத்தில் வல்லுநர்களான இவர்கள் வாழ்ந்த காலம் 250 B.C TO 900 B.C) ஆகும்( அதுக்கு இன்னா இப்போ அப்படின்னு கேக்குறீங்களா?). இவங்க அந்த காலத்திலேயே ஒரு பெரிய்ய்ய்ய்ய காலண்டர் தயாரிச்சு வச்சிருந்தாங்க, இப்ப அந்த இனத்த சார்ந்தவாங்க யாரும் இல்ல. ஆனா அவங்க வழிபட்ட வழிபாடு தளங்கள், அவிஹ வாழ்ந்த இடம் எல்லாம் இன்னும் இருக்கு. இப்ப என்ன மேட்டர்நா! அவங்க அப்ப தயாரிச்சு வச்ச காலண்டர் வர்ற 2012 ஆம் வருசத்தோட முடியிது. ஒரு சிலர் இந்த காலண்டர்ர ஆதாரமா வச்சிக்கிட்டு 2012 தான் உலகத்தோட கடைசி நாள் அப்படிங்கறாங்க, ஒரு சிலர், அதுல்லாம் ஒண்ணும் கிடையாது நைனா 2012 ஒரு பெரிய மாற்றம் வரும் அப்படிங்கறாங்க, இன்னும் ஒரு சிலரோ ரெண்டுமே கிடையாது உலகம் வழக்கம் போல சுத்திக்கிட்டு தான் இருக்கும் பொம்பளைங்கோ மெகா சீரியல்லும், ஆம்பளைங்கோ டாஸ்மாக் லையும், குருவி படத்தோட 1200ஆவது நாள் விழாவுமா போய்கிட்டு இருக்கும் அப்படின்னு சொல்றாங்க. ஆனா நம்ம ROLLAND EMERICH (DIRECTOR OF INDEPENDENCE DAY, PATRIOT, GODZILLA, THE DAY AFTER TOMORROW, 10,000 B.C) என்ன சொல்றாருன டேய் எடுபட்ட பயலுவளா! போக்கத்த பேமானி பசங்களா மரத்த வெட்டுரத நிப்பாட்டுங்கடா, பெட்ரோல் வண்டி ஒட்டாதிங்கடா இல்லாட்டி 2012LA கடல் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளம் வந்து சாவிங்கடா அப்படின்னு அடுத்த வருஷம் (JULY 10 2009) ரிலீஸ் பண்றதுக்கு 2012 அப்படிங்கற பேர்ல ஒரு படம் எடுத்துக்கிட்டு இருக்காரு. ஆனக்க ( டிரைலேர் --> சொடிக்கி பாருங்க)இப்ப வந்துருக்கு. உலகத்திலேயே பெரிய மல இமய மல தான் இமய மலைய மறைச்சிகிட்டு ஒரு பெரிய வெளளம் வர மாதிரி ட்ரைலர்ல்ல காட்டிருக்கான் பாரு, தசாவதார சுனாமில்லாம் செத்துச்சு. 2012

HAIKKU




பின் வரும் ஹைக்கூ( என்கிற பெயரில்) நான் இயற்றிய(உளறிய) முதல் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த ஹைக்கூ ஆகும்

" இடியின் அடியால்
அழுதது மேகம்
மழை
"

INTRO

கே: ஏன் இந்த பதிப்பு?
பதில் :
காரணம் ஒன்று: பல பதிப்புகள் படித்து பாதிக்க பட்டதால்!

காரணம் இரண்டு : அகல பட்டை இணைப்போடு ஒரு கணினியும், நூற்றி ஒன்றுக்கும் அதிகமான கீ'கள் கொண்ட கீபோர்டு உள்ளதாலும், அதை படிக்க ஒரு ஜீவன் உள்ளதாலும்( வேறு யார் அதுவும் நான் தான் ) இந்த பதிப்பை ஆரம்பிக்கிறேன்.